விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை


விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
x

விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை இதுகுறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரி

கோரிமேடு காமராஜ் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39). பெயிண்டர். இவர் சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கினார். அதற்கு சிகிச்சை பெறும் நிலையில் அவரது பேச்சு குழந்தை தனமாக மாறியுள்ளது. இதனை அவர்களது நண்பர்கள் கிண்டல் செய்தார்களாம்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று எலி மருந்து (விஷம்) குடித்து இஸ்ரவேல் நகரில் உள்ள தனது தாய் சரோஜா வீட்டுக்கு வந்து விசயத்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக விஜயகுமாரை சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story