திருக்காமீசுவரர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சி


திருக்காமீசுவரர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சி
x

வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பாரிவேட்டை நிகழ்ச்சி

வில்லியனூரில் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் சிறப்பு அலங்காரத்துடன் தென்கோபுர வீதியில் எழுந்தருளி பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தூக்கி சென்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தினர்.

நாளை (திங்கட்கிழமை) 63 நாயன்மார்களுடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நாளை மறுதினம் மாலை 7 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. காலை 7.40 மணி அளவில் நடக்கும் இந்த தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். 2-ந்தேதி இரவு தெப்ப உற்சவமும் 3-ந்தேதி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

4-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர், நிர்வாக அலுவலர், ஆலய ஊழியர்கள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story