பாசிக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பாசிக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x

புதுவையில் 113 மாத சம்பளம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி

புதுவை பாசிக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர் போராட்டம்

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 113 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களில் 163 பேர் தினக்கூலி ஊழியர்கள் ஆவர்.

நிலுவை சம்பளம் வழங்கவேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.

வேலை நிறுத்தம்

இதைத்தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காணும் வரை தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்தனர். இதன்படி தட்டாஞ்சாடிவயில் உள்ள பாசிக் தலைமை அலுவலகத்தில் இன்று அவர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம், தலைவர் தினேஷ் பொன்னையா, கவுரவ தலைவர் அபிசேகம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஊழியர்களின் போராட்டம் காரணமாக செடிகள் விற்பனையகம், இடுபொருள் விற்பனையகம், உர உற்பத்தி மையம் உள்ளிட்டவை மூடிக்கிடந்தன.


Next Story