காய்ச்சல் பாதித்தவர்கள் டெங்கு பரிசோதனை செய்யவேண்டும்


காய்ச்சல் பாதித்தவர்கள் டெங்கு பரிசோதனை செய்யவேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2023 1:43 PM GMT (Updated: 17 Oct 2023 2:02 PM GMT)

காய்ச்சல் பாதித்தவர்கள் டெங்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால்

காய்ச்சல் பாதித்தவர்கள் டெங்கு பரிசோதனை செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள ஆய்வு

காரைக்கால் கோவில்பத்து அன்புநகர் பகுதியில் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், நோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை, கொசுவினால் பரவும் நோய் தடுப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் சேகர் ஆகியோர் கோவில்பத்து அன்புநகர் பகுதியில் இன்று களஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு பல வீடுகளில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை டெங்கு தடுப்பு குழுவினர் அழித்தனர். பின்னர் வீடு வீடாக சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

டெங்கு பரிசோதனை

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறுகையில், 'காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு அதிகம் பரவவில்லை. தொடர் மழையாலும் மற்ற மாநிலத்தில் இருந்து டெங்கு பாதித்த நபர்கள் இங்கு வருவதால், அவர்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவ அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், காய்ச்சலால் யார் பாதிக்கப்பட்டாலும், உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டெங்கு பரிசோதனை செய்துகோள்ளவேண்டும்' என்றார்.


Next Story