12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுகள்


12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுகள்
x

பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில் 12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுகள் வழங்கப்பட்டது.

வில்லியனூர்

புதுவை பியூச்சர் இந்தியா அறக்கட்டளை சார்பில், பேரிடர் காலத்தில் நலிவடைந்த மீனவர்களுக்கு புதிய பைபர் படகுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறக்கட்டளை குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 12 மீனவ குடும்பங்களுக்கு பைபர் படகுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொழில் அதிபர் சஞ்சனா நிதியுதவியுடன், பியூச்சர் இந்தியா அறக் கட்டளை தலைவர் ராஜ மனோகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி கலைக்கல்லூரி துணை பேராசிரியை மோகன சுந்தரி படகுகளுக்கான ஆணையை வழங்கினார்.

அப்போது மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை அறக்கட்டளையின் மூலம் உயர்த்தவே, இந்த இலவச பைபர் படகுகள் வழங்கப் படுகிறது. அதனை முறையாக பயன்படுத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story