பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்
x

பாகூர் அரசு பெண்கள் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பாகூர்

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின் வரவேற்றார். வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சுமார் 50 பேர் மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து பாகூர் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள குளத்தைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களிடம் வழங்கினர். முடிவில் மனையியல் விரிவுரையாளர் அகிலா நன்றி கூறினார்.

1 More update

Next Story