பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்
x

காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் விஜய மோகனா தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமுதாய நலப்பணி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன், திட்ட அதிகாரி பார்வதி கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவிகள், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திகொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்த வேண்டிய பொருட்களை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 More update

Next Story