போலீசார் தீவிர வாகன சோதனை


போலீசார் தீவிர வாகன சோதனை
x

புதுவையில் சுதந்திர தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் எஸ்.பி. பட்டேல் சாலை-ஆம்பூர் சாலை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை செய்தனர்.

இதேபோல் நகர பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.


Next Story