ரவுடிகள் வீடுகளில் போலீசார் ஆய்வு


ரவுடிகள் வீடுகளில் போலீசார் ஆய்வு
x

புதுவை பெரியகடை போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட ரவுடிகள் வீடுகளில் இன்று ஆய்வு நடத்தினார்கள்.

புதுச்சேரி

பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட ரவுடிகள் வீடுகளில் இன்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகள் யாரும் தடையை மீறி நுழைந்துள்ளார்களா? ரவுடிகள் நடமாட்டம் எதுவும் இருக்கின்றதா? என ஆய்வு நடத்தினார்கள். மேலும் பொது மக்களிடம் ரவுடிகள் தொல்லை எதுவும் இருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் கூறினர்.


Next Story