இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக சுவரொட்டிகள்


இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக சுவரொட்டிகள்
x

பாகூரில் கோவில் திருவிழா நடத்துவதில் 2 குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பாகூர்

பாகூரில் கோவில் திருவிழா நடத்துவதில் 2 குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவில் தீமிதி திருவிழா

புதுச்சேரி இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. கோவிலுக்கு என்று தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, புதிதாக அறங்காவலர் குழுவை அமைக்க கூடாது என உத்தரவிட்டது.

இந்தநிலையில் பாகூர் நவ தேவஸ்தான கோவிலான திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழுவுடன் புதிதாக தீ மிதி திருவிழாவிற்கு என 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்த குழு வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ந்தேதி வரை அதிகாரத்தில் இருக்கும் என கூறப்பட்டது.

ஆணையருக்கு எதிராக சுவரொட்டிகள்

இந்த 2 குழுக்களும் இணைந்து திருவிழா நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதற்கிடையே கோவில் பந்தகால் நடும் நிகழ்ச்சியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக 2 குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நேற்று நள்ளிரவில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரனுக்கு எதிராகவும், ஊழல் செய்து இருப்பதாகவும் சர்வே நம்பரை சுட்டிக்காட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.


Next Story