ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகை திடீர் ரத்து


ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வருகை திடீர் ரத்து
x

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரி வர திட்டமிட்டிருந்தார். அதாவது வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் அவர் புதுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தது. புதுவை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புதிய திட்டங்களை தொடங்கிவைக்கவும், புதுவை அரசின் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் திட்டம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உறுதி செய்திருந்தார்.

திடீர் ரத்து

மேலும் ஜனாதிபதி வருகை தொடர்பான பணிகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடத்தினார்கள். புதிய திட்டங்கள் தொடங்குவது தொடர்பாக பணிகளை விரைவாக மேற்கொள்ள அரசு அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறொரு தேதியில் அவர் புதுவை வருவார் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதி வெளிநாடு செல்வதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story