கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்


கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்
x

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க பொதுமக்கள் குவிந்தனர்.

காரைக்கால்

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க பொதுமக்கள் குவிந்தனர்.

குறைதீர்க்கும் முகாம்

புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு துறைகளில் இந்த முகாம்கள் நடத்த ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. முகாம் நடைபெறும் நாளில் கூட அதிகாரிகள் காலதாமதமாக வருவதாக புகார் எழுந்தது. இதனால் பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனையின் பேரில், அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் மனுஅளிக்க குவிந்தனர். பொதுமக்கள் கொடுத்த மனுவை குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆஸ்பத்திரியை சீரமைக்க வேண்டும்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எலும்பு முறிவு டாக்டர்கள் உடனே நியமிக்கவேண்டும். நவீன ஸ்கேன் வசதிகளை கொண்டுவரவேண்டும். ஆஸ்பத்திரியை சீரமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சாலைகளை புதுப்பிக்கவேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கான நிதியை அவர்களது அடிப்படை தேவைகளுக்கு மட்டும் செலவிடவேண்டும். கிராமங்களுக்கிடையே மினி பஸ்சை இயக்கவேண்டும். சாலை, சாக்கடை வசதிகளை மேம்படுத்தவேண்டும். மஞ்சள் நிற ரேஷன் கார்டை சிவப்புநிற ரேஷன் கார்டாக மாற்றவேண்டும். இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும். மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர்.


Next Story