அரசு குடியிருப்புகள் சீரமைக்கும் பணி


அரசு குடியிருப்புகள் சீரமைக்கும் பணி
x

புதுவையில் அரசு குடியிருப்புகள் சீரமைக்கும் பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுவை உப்பளம் தொகுதி முதலியார்பேட்டை உழந்தை அரசு குடியிருப்பு கழிவறைகள், வெண்டிலேட்டர்கள் சேதமடைந்துள்ளன. இதன் சீரமைப்பு பணிகள் ரூ.14 லட்சத்து 99 ஆயிரம் செலவில் நடைபெற உள்ளது. இந்த பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது மனைவி ஜெசிந்தாவுடன் இணைந்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சேதமடைந்துள்ள பிற கட்டிட பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

1 More update

Next Story