ரூ.73 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியது


ரூ.73 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியது
x

வில்லியனூா் அரசு பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணியை ரூ.73 லட்சம் ெசலவில் அமைச்சா் நமசிவயாம் ெதாடங்கிய ைவத்தாா்.

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை மீண்டும் புதுப்பித்து, அதன் உயரத்தை உயர்த்தி கட்டுவது, பள்ளி கட்டிடத்தை புனரமைப்பது மற்றும் பாப்பாஞ்சாவடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு புதிய கழிவறை, பள்ளி கட்டிடத்தை புனரமைப்பது ஆகிய பணிகள் ரூ.72.95 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் பார்வதி, சாந்தகுமாரி, பா.ஜ.க. பிரமுகர் பூக்கடை ரமேஷ், முகமது யூனஸ், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி செல்வநாதன், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மாநில ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் தேவநாதன், வேலு, கந்தசாமி, ஜனா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story