கதிர்காமம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள்


கதிர்காமம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள்
x

கதிர்காமம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

கதிர்காமம் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் ரூ.23 லட்சம் செலவில் ரமணபுரம் முதன்மை சாலை செப்பனிடும் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அதன்பின் மேட்டுப்பாளையம் (பெட்ரோல் பங்க் அருகில் இருந்து அண்ணா வீதிவரை) இணைப்பு சாலை செப்பனிடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் எம்.பி. நிதியின் கீழ் ரூ.24 லட்சத்து 75 ஆயிரம் செலவில் மேட்டுப்பாளையம் பால்வாடி வீதியில் புதிய அங்கன்வாடி கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story