ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு
x

புதுவையில் ஓடும் பஸ்சில் ரூ.5 லட்சம் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி

புதுவையில் ஓடும் பஸ்சில் ரூ.5 லட்சம் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தனியார் பஸ்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கல்கி நகரை சேர்ந்தவர் அபுதாகீர். அவரது மனைவி ஷாஜிதா பர்வீன் (வயது 35).

இவர் முத்தியால்பேட்டையில் நடந்த புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்திருந்தார். விழா முடிந்ததும் அவர் புதிய பஸ் நிலையம் செல்வதற்காக முத்தியால்பேட்டையில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி வந்தார்.

ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு

அவர் தான் அணிந்திருந்த நகைகளான வளையல், நெக்லஸ், செயின், மோதிரம் போன்றவற்றை சில்வர் டப்பாவில் போட்டு பையில் வைத்து எடுத்து வந்துள்ளார். புதுவை புதிய பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது நகைகள் வைத்திருந்த டப்பாவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.

ஓடும் பஸ்சில்...

பஸ்சில் பயணம் செய்தபோது மர்ம ஆசாமிகள் யாரோ நகைகளை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் ஷாஜிதா பர்வீன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அவருடன் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் யாராவது இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனவே ஓடும் பஸ்சில் திருடும் பழைய குற்றவாளிகள் யாராவது இந்த துணிகர செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story