அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை


அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை
x

புதுவையில் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு

புதுவை அரசின் கல்வி, ஆதிதிராவிடர், சுற்றுலா, மீன்வளம், உள்ளாட்சி உள்ளிட்ட 19 துறைகளில் பணிபுரியும் 54 பிரிவு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடுகள் இருப்பதாகவும், அதை நீக்கவேண்டும் என்றும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய மத்திய உள்துறை இணை செயலாளருடன் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுவை அரசின் நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் இந்த துறை தலைவர்களுக்கு குறிப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளார்.

நவம்பர் 10-ந்தேதிக்குள்...

அதில் 3-வது ஊதியக்குழு முதல் 7-வது ஊதியக்குழு வரையிலான பரிந்துரைகள் தொடர்பாக புதுவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், இதர யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இடையேயான சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய படிவத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதிக்குள் நிதித்துறையை வந்துசேர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story