புட்லாய் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்


புட்லாய் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்
x

தவளக்குப்பம் அருகே புட்லாய் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அருகே தானம்பாளையத்தில் பழமையான புட்லாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத செடல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இரவு 8 மணி அளவில் அம்மனுக்கு பட்டாபிஷேகமும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் புட்லாய் அம்மன், விநாயகர், முருகர் வீதியுலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story