மதகடிப்பட்டில் பள்ளத்துக்குள் சென்ற கடைகள்


மதகடிப்பட்டில் பள்ளத்துக்குள் சென்ற கடைகள்
x

திருபுவனை அருகே மதகடிப்பட்டில் 4 வழிச்சாலையை உயர்த்தி அமைத்ததால் பள்ளத்துக்குள் கடைகள் சென்றுள்ளதால் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது.

திருபுவனை

புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வீடுகள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாலை உயர்த்தப்பட்டும், மேம்பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மதகடிப்பட்டு பகுதியில் 4 வழிச்சாலை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் சுமார் 5 அடி பள்ளத்துக்குள் சென்று விட்டன. இதனால் பொதுமக்கள் அந்த கடைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடையை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story