சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மா் கோவில் தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அரியாங்குப்பம்
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரம்மோற்சவ விழா
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 7.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் திருத்தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.