மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி


மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி
x

காரைக்கால் அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

காரைக்கால்

காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவிகளுக்கு டி.சி. பவர் சப்ளை குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சந்தனசாமி தொடங்கி வைத்து பேசுகையில் 'மாணவிகள் தங்கள் செய்முறை திறன்களை இந்த தொழில்நுட்ப உலகத்தின் போட்டிக்கு ஏற்றவாறு வளர்த்துக்கொள்ள வேண்டும். கருத்தியல் பாடங்களை நன்கு புரிந்து கொண்டு அதன் மூலம் தங்கள் செய்முறை திறன்களை நன்கு வளர்த்துக்கொள்ளவேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் விமல்குமார், கல்லூரி ஆய்வக பயிற்றுனர்கள் புனிதவதி, சங்கீதா ஆகியோர் மாணவிகளுக்கு டி.சி. பவர் சப்ளை யூனிட்களை சிறந்த முறையில் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி விரிவுரையாளர்கள் விமலன், ராஜபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story