தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி


தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி
x

வில்லியனூர் அருகே தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.

வில்லியனூர்

புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் குலோத்துங்க சோழன் விளையாட்டு திடலில் ஈஷா புத்துணர்வு கோப்பை-2023 கைப்பந்து மற்றும் துரோபால் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்துகொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பா.ஜ.க. தொகுதி தலைவர் தியாகராஜன், குலோத்துங்க சோழன் விளையாட்டு கழக தலைவர் தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் புதுவை மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம், துரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கிராமிய அளவில் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் தென்னிந்திய அளவில் மாவட்ட ரீதியாகவும் தேர்வு செய்யப்படும் அணிகளுடன் சேர்ந்து விளையாடும். கைப்பந்து இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியினை ஈஷா கணேசன் ஒருங்கிணைத்தார்.


Next Story