பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மாத 4-வது செவ்வாய்க்கிழமையையொட்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.

கோட்டுச்சேரி

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 4-வது செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story