மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு


மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

புதுச்சேரி

மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி

மாதந்தோறும் பவுர்ணமிக்கு பிறகு வரும் 4-வது நாள் சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி மாதத்தில் வருவதே மகா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பாத யாத்திரை

இதைத்தொடர்ந்து உலக நன்மை வேண்டி மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

இந்த பாதயாத்திரையை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரையில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல, தொடர்ந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இதில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பாதயாத்திரை முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியாங்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.


Next Story