விளையாட்டு, கலாசார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


விளையாட்டு, கலாசார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

புதுச்சேரி

புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.)கல்லூரியில் வருடாந்திர கலாசார மற்றும் விளையாட்டு விழா- 'இலன்-2023' என்ற பெயரில் நடைபெற்றது. மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் விழாவை தொடங்கி வைத்து பேசினார். துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ் கலந்து கொண்டு, விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ-மாணவிகள் மற்றும் மில்லெட் குக்கிங் போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற்றனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளரான தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் பி.சிவக்குமார் நன்றி கூறினார். இதில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story