எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
x

புதுச்சேரி, காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. மொழிப்பாடத்தை 160 பேர் எழுத வரவில்லை.

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொழிப்பாடத்தை 160 பேர் எழுத வரவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முடிவடைந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று மொழிப்பாட தேர்வுகள் நடந்தன. மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக புதுச்சேரியில் 38 மையங்களும், காரைக்காலில் 13 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

மாணவ, மாணவிகள் காலையிலேயே கோவில்களுக்கு சென்று வணங்கிவிட்டு தேர்வு எழுத ஆர்வமுடன் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். புதுவையில் 12 ஆயிரத்து 972 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 106 பேர் தேர்வு எழுதவில்லை.

160 பேர் வரவில்லை

காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 54 பேர் தேர்வு எழுதவில்லை. ஒட்டுமொத்தமாக புதுவை, காரைக்காலில் மொழிப்பாடத்தை 160 பேர் தேர்வு எழுதவரவிலை.

தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், தடையில்லா மின்சார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர்கள் துணையுடன் தேர்வு எழுதினர். அவர்களுக்கு கூடுதல் நேரமும் அளிக்கப்பட்டது. தேர்வின்போது முறைகேடுகளை கண்காணிக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் தேர்வு மையங்கள் தோறும் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.


Next Story