இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்


இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்
x

மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

புதுச்சேரி

மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

மாற்றுத்திறனாளி

புதுவை பாக்குமுடையான்பட்டு லாஸ்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் கணேஷ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர், வீட்டின் அருகே உள்ள இடத்தில் குடோன் கட்டி வாடகைக்கு விட முடிவு செய்தார். இதற்கான வேலைகள் நடந்து வந்தன.

இதற்காக இரும்பு தகடு, இரும்பு குழாய், கேட் ஆகியவற்றையும் வாங்கி வெளியிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று 3 பேர் அங்கு வந்து 3 சக்கர சரக்கு வாகனத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு, குழாய், கேட் ஆகியவற்றை திருடி ஏற்றினர்.

கையும், களவுமாக பிடிபட்டனர்

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கணேசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் அங்கு வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கையும் களவுமாக 3 பேரையும் மடக்கி பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள், திண்டிவனம் தாலுகா தழுதாளியை சேர்ந்த சஞ்சீவி (வயது 32), சரண்ராஜ் (28), வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) என்பதும், இரும்பு வியாபாரிகளான அவர்கள் இரும்பு பொருட்களை திருடி சென்று விற்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் திருடிய இரும்பு பொருட்களையும், 3 சக்கர சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story