2-வது நாளாக கோடை மழை


2-வது நாளாக கோடை மழை
x

பாகூா் பகுதியில் 2-வது நாளாக கோடை மழை பெய்தது.

பாகூர்

வளி மண்டல சுழற்சி காரணமாக நேற்று பாகூர், கரிக்கலாம்பாக்கம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் பகுதியில் மழை பெய்தது. திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் உளுந்து பயிர்கள் சேதமடைந்தது.

இந்த நிலையில் பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியகோயில், பரிக்கல்பட்டு, சோரியாங்குப்பம், அரங்கனூர் ஆகிய பகுதியில் 2-வது நாளாக இன்று காலை 10.30 மணியளவில் மழை பெய்தது. இந்த தொடர் மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கிநின்றது.

இந்த திடீர் மழை காரணமாக பச்சை பயிறு, உளுந்து, எள் போன்றவை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டிய நிலையில், தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

வெயிலும், மழையும் மாறி மாறி வந்ததால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story