செல்போன் பறித்த வாலிபர் கைது

திருபுவனை அருகே 6 செல்ேபானகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று மதகடிப்பட்டு சந்தைதோப்பு பகுதியில் காய்கறி வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், கோதண்டராமனின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் திருபுவனை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருபுவனையைச் சேர்ந்த ஆனந்தவேலு மகன் மணிகண்டன் (27) என்பதும் கோதண்டராமன் உள்பட பலரிடம் 6 செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 6 செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






