புதுச்சேரி சட்டசபை வருகிற 20-ந் தேதி கூடுகிறது


புதுச்சேரி சட்டசபை வருகிற 20-ந் தேதி கூடுகிறது
x

புதுச்சேரி சட்டசபை வருகிற 20-ந் தேதி கூடுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை வருகிற 20-ந் தேதி கூடுகிறது.

இது குறித்து சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை கூட்டம்

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. 6 மாதத்திற்கு ஒருமுறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த அடிப்படையில் வருகிற 20-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் தொடர்ந்து எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

இந்த கூட்டத்தில் புதுவையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதற்கு முயற்சி மேற்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

ரூ.612 கோடி ஒதுக்கீடு

புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.612 கோடியே 79 லட்சத்தில் வரைவு திட்டம் தயாரித்துள்ளனர். இந்த கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும். இன்னும் 1 மாத காலத்தில் சட்டசபை கட்ட டெண்டர் வைக்கப்படும். டிசம்பர் மாதம் புதுவை வரும் பிரதமர் மோடி, சட்டசபை கட்டும் பணியை தொடங்கி வைக்க உள்ளார். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். முதல்-அமைச்சர் ரங்கசாமி கையால் திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டசபை கூட்டம் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.


Next Story