உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் சாக்கடை கால்வாய்


உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் சாக்கடை கால்வாய்
x
தினத்தந்தி 24 Jun 2023 5:19 PM GMT (Updated: 24 Jun 2023 6:11 PM GMT)

காரைக்கால் நகராட்சி எதிரே திறந்துள்ள சாக்கடை கால்வாயால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது,

கோட்டுச்சேரி

காரைக்கால் நகராட்சிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர அங்கு பணியாற்றும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களும் நகராட்சிக்கு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் நடைபாதையில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. சற்று கவனம் சிதறினாலும் சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. நகராட்சிக்கு வரும் ஊழியர்களும் இதனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். உயிர்ப்பலி ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அந்த சாக்கடை கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story