கோவில்நில மோசடியில் கைதான சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

கோவில்நில மோசடியில் கைதான சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
x

கோவில்நில மோசடியில் கைதான வில்லியனூர் சார்பதிவாளர் சிவசாமியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

கோவில்நில மோசடியில் கைதான வில்லியனூர் சார்பதிவாளர் சிவசாமியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார்.

1½ ஏக்கர் நிலம்

புதுவை பாரதி வீதியில் உள்ள காமாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமாக ரெயின்போ நகரில் உள்ள 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் (சுமார் 1½ ஏக்கர்) போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் போலி ஆவணங்களை பதிவு செய்ததாக அப்போது உழவர்கரை சார் பதிவாளராகவும், இப்போது வில்லியனூரில் பணியாற்றி வரும் சார்பதிவாளர் சிவசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். கோவில் நில மோசடி வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் சார்பதிவாளர் சிவசாமியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் வல்லவன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை வருவாய்த்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story