அரிசி வியாபாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு


அரிசி வியாபாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு
x

திருக்கனூர் அருகே அரிசி வியாபாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள வி.ஆண்டிப்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). அரிசி வியாபாரம் செய்து வருகிறார். சென்னையில் வசிக்கும் அவரது மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. அவரை பார்ப்பதற்காக செந்தில்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு உள்ளிட்ட வெள்ளிப்பொருட்களை திருடி சென்றனர். நேற்று வீட்டுக்கு திரும்பிய செந்தில்குமார் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story