செல்போன் கோபுரம், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்


செல்போன் கோபுரம், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
x

புதுச்சேரியில் செல்போன் கோபுரம், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்குளம்

புதுச்சேரியில் செல்போன் கோபுரம், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் டவர்

புதுவை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று நள்ளிரவில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் இறங்கி வர மறுத்தார்.

மனநிலை பாதிப்பு

உடனே தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரிடம் நைசாக பேசி கீழே இறங்கி வர செய்தனர்.

விசாரணையில் அவர் பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த அய்யப்பன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அதன்பின் அவரது உறவினர்களை வரவழைத்த போலீசார் அவரை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டிரான்ஸ்பார்மர்

இந்தநிலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி உள்ளார். இன்று காலை புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே வந்த அவர் அங்குள்ள மின்கம்பம் மீது ஏறி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார், மின்துறையினர் விரைந்து வந்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அவரை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து மீண்டும் அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அடுத்தடுத்து வாலிபர் செல்போன் கோபுரம், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story