கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்


கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்
x

காரைக்கால் அருகே 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத கிணற்றை இளைஞர்கள் தூர்வாரினர்.

காரைக்கால்

காரைக்கால் திருநகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களின் குடிநீர் தேவையை அங்குள்ள கிணறு ஒன்று தீர்த்து வந்தது. குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்ட பிறகு இந்த கிணற்றை, நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்பகுதி மக்கள், குப்பை தொட்டியாக பயன்படுத்தி வந்ததால் கிணற்று தண்ணீர் அசுத்தமானது.

இந்த நிலையில் கிணற்றை சுத்தம் செய்து தூர்வார அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நகராட்சி அதிகாரிகளை அழைத்து கிணற்றை தூர்வார உத்தரவிட்டார்.

இதையடுத்து திருநகர் இளைஞர்கள், நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து கிணற்றில் இறங்கி குப்பைகளை அகற்றினர். அப்போது அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களை பாராட்டினார். மேலும், தூர்வாரும் பணி முடிந்ததும் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், கிணற்றின் மேல்பகுதியை மூடிபோட்டு மூடவும் நகராட்சி அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story