மீன்வள ஆராய்ச்சி மையத்தில் திருட்டு


மீன்வள ஆராய்ச்சி மையத்தில் திருட்டு
x

கோட்டுச்சேரியில் மீன்வள ஆராய்ச்சி மையத்தில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள மத்திய அரசின் ராஜீவ்காந்தி நீர் வள உயிரின ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்கால் நேதாஜி நகரைச் சேர்ந்த டாக்டர் தினகரன் (வயது 47) விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கருக்களாச்சேரி சாலையில் புதிதாக ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய கட்டிடத்திற்கு பொருட்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சம்பவத்தன்று அலுவலகத்தின் கணக்காளர் பார்த்தசாரதி மற்றும் ஊழியர்கள் பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசில் தினகரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story