அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி நடைபெற்றது.
அரியாங்குப்பம்
உலக தமிழ் வளர்ச்சி மன்றம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் அளிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. பூரணாங்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை முன்னாள் ராணுவ வீரர் நந்தா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், ஜெயபால், வெங்கடேசன், கார்த்தி, மதி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியாளர் சங்கீதா கண்ணன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் அரசுப் பள்ளியில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் செல்போனில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதிலிருந்து அவர்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த முற்றோதல் பயிற்சி வகுப்பு நடத்தப்படுவதாக தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.






