திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி


திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
x

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

திருநள்ளாறு

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.

சனிப்பெயர்ச்சி விழா

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர்கள் ஜான்சன், வெங்கடகிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா பேசியதாவது:-

ஆன்லைனில் முன்பதிவு

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சி விழாவில், திருப்பதியைபோல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், வரிசை வளாகம், கட்டண வரிசை, இலவச வரிசை, பந்தல், வாகன பார்க்கிங் வசதி, குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

மருத்துவ வசதி

கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளை சீரமைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், உணவகங்களில் தரமான உணவு வழங்கவும், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story