புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்


புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 28 Dec 2022 3:59 PM GMT (Updated: 28 Dec 2022 4:00 PM GMT)

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள ஓட்டல்களில் பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஓட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ணமயமான ஒளி விளக்கு அலங்காரங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரி தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது.




Next Story