நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்


நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம்
x

புதுவையில் தொடர் விடுமுறை காரணமாக புதுவை நகர பகுதியில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி

தொடர் விடுமுறை காரணமாக புதுவை நகர பகுதியில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக புதுவை வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொடர் விடுமுறை

இன்று (தமிழ் புத்தாண்டு) மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் தொடர்விடுமுறை காரணமாக புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி தற்காலிகமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

அதன்படி புதுவை கடற் கரைக்கு வரும் அனைத்து விதமான இலகு மற்றும் கனரக வாகனங்கள் பழைய துறைமுகத்தில் நிறுத்த வேண்டும். கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள சாலைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களை கீழ் கண்ட வீதியின் ஒரு பக்கமாக மட்டும் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

லல்லி தோலாந்தல் வீதி, ரிச்மவுண்ட் வீதி, துபே வீதி, செயிண்ட் ழில் வீதி, மரைன் வீதி, லாதி லோரிஸ்தான் வீதி, சர்கூப் வீதி, கஸரேன் வீதி, செயிண்ட் லாரண்ட் பஜார் வீதி, ரோமண் ரோலண்ட் வீதி, சுய்ப்ரேன் வீதி, லபெரடோன்னைஸ் வீதி ஆகிய வீதிகளில் ஒரு பக்கமாக வாகனங்களை நிறுத்த வேண்டும்.

செயிண்ட் லூயி வீதி மற்றும் துமாஸ் வீதிகளில் எந்த வித வாகனங்களும் நிறுத்த அனுமதியில்லை. சுப்பையா சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. சோனாம்பாளையம் சந்திப்பில் இருந்து வம்பாகீரப்பாளையம் சாலையில் பாண்டி மெரினா வரை ஒரு பக்கம் மட்டும் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும்.

செஞ்சி சாலை

செஞ்சி சாலை மற்றும் ஆம்பூர் சாலைகளில் சோனாம்பாளையம் தொடங்கி எஸ்.வி. பட்டேல் சாலை வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் ஒரு பக்கம் மட்டும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் நிறுத்த வேண்டும். மேற்கண்ட வாகன நிறுத்தம் இடங்களில் போதிய அளவு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வாகன நிறுத்தம் இடத்தின் தன்மைக்கு ஏற்ப வாகனங்கள் சோனாம்பாளையம் சந்திப்பு, புஸ்சி வீதி, செஞ்சி சாலை சந்திப்பு மற்றும் எஸ்.பி.பட்டேல் சாலை சந்திப்புகள் வழியாக ஒயிட் டவுன் பகுதியில் நுழைய அனுமதிக்கப்படாது. இந்த போக்குவரத்து மாற்றம் வருகிற 16-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story