முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை


முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை
x

காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில், செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில், செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இளம் செஞ்சிலுவை சங்க காரைக்கால் ஒருங்கிணைப்பாளர் ஜெயபாரதி வரவேற்றார். மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து டாக்டர்கள் மணிகண்டன், ராசப்பா ஆகியோர் கலந்து கொண்டு முதலுதவி சிகிச்சை அவசியம் குறித்து பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் லட்சுமணபதி, செந்தில்குமார், சோழசிங்கராயர், ஹேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story