சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு


சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
x

புதுவையில் சமூக அறிவியல், ஆங்கில ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளை மறுதினம் (17-ந் தேதி) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி பெற்ற சமூக அறிவியல் ஆசிரியர்கள் 172 பேருக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. 18-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை 63 ஆங்கில விரிவுரையாளர்களுக்கும், 245 பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு புதுவை பள்ளிக்கல்விதுறை வளாகம், காரைக்கால் மற்றும் மாகியில் முதன்மை கல்வித்துறை அதிகாரி அலுவலகங்களிலும், ஏனாமில் கல்வித்துறை அலுவலகத்திலும் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி கல்வித்துறையின் துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story