மரங்களுக்கு பெயர்சூட்டு விழா


மரங்களுக்கு பெயர்சூட்டு விழா
x

பாகூரில் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரத்துக்கு பெயர்சூட்டும் விழா நடந்தது.

பாகூர்

பாகூர் ஆல்பா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரத்துக்கு பெயர்சூட்டும் விழா மற்றும் கைவினை கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குனர் தனதியாகு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களுக்கு மாணவர்களின் பெயர்களை சூட்டினர். இதனை தொடர்ந்து கைவினை கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.


Next Story