வாகன பேன்சி எண்கள் ஏலம்


வாகன பேன்சி எண்கள் ஏலம்
x

புதுவையில் வாகன பேன்சி எண்கள் ஏலம் நடைபெறவுள்ளது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி

புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை போக்குவரத்து துறையின் PY-01 DB (புதுச்சேரி) வரிசையில் உள்ள எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் வருகிற 24-ந்தேதி மாலை 4.30 மணிவரை ஏலம்விட இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவு சொல்லை மேற்கண்ட இணையதளத்தில் வருகிற 23-ந்தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே வருகிற 24-ந்தேதி காலை 10 மணிமுதல் மாலை 4.30 மணிவரை ஏலத்தில் பங்கு பெறலாம். இந்த ஏல முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று முதல் https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்தொகையின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத்துறை அலுவலகத்திலும் தெரிந்துகொள்ளலாம். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story