சுண்ணாம்பாறு தடுப்பணையை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை


சுண்ணாம்பாறு தடுப்பணையை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
x

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு தடுப்பணையை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியாங்குப்பம்

புதுச்சேரியை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு உள்ளது. இந்த ஆற்றில் வழியாக படகு மூலம் பாரடைஸ் பீச்சுக்கு கடலின் அழகை ரசிக்கலாம். இந்தநிலையில் இந்த ஆற்றில் கடல்நீர் உட்புகாமல் இருக்க நோணாங்குப்பம் புதுச்சேரி-கடலூர் சாலையில் மேம்பாலத்தின் அடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் முழுவதும் தேங்கி நிற்கிறது. ஆனால் தற்போது ஆகாயத்தாமரை தடுப்பணையை ஆக்கிரமித்து வருகிறது. நாளுக்கு நாள் அது பரவி வருகிறது. இதனால் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பணையை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story