இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்?


இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்?
x

சந்திரபிரியங்கா ராஜினாமாவா அல்லது பதவி நீக்கமா? என்பதை இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி

சந்திரபிரியங்கா ராஜினாமாவா அல்லது பதவி நீக்கமா? என்பதை இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஏன்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசிதழில் வெளியிடாதது ஏன்?

புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவின் விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா? ராஜினாமா செய்தாரா? என்பது குறித்து இதுவரை அரசிதழில் வெளியிடப்படாதது ஏன்?. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தான் எடுத்துக்கொண்ட சத்திய பிரமாணத்தை மீறி, தனக்கும் முதல்-அமைச்சரும் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து மற்றும் ஆலோசனைகளை வெளியிட்டு வருகிறார்.

சந்திரபிரியங்காவின் குற்றச்சாட்டான சாதி, பாலின தாக்குதல் குறித்து தேசிய எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேணடும். அப்போதுதான் யார் குற்றவாளி? என்பது தெரியவரும்.

ஆதிதிராவிட சமுதாயம்

புதுவை காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தரவில்லை என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்தான் என்பதை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த முறை முதல்-அமைச்சர் பதவியை நமச்சிவாயத்துக்கு ஏன் வழங்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து கட்சியின் மேலிட பார்வையாளர்கள் புதுவை வந்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்டனர். அப்போது லட்சுமிநாராயணன் உள்பட 14 பேர் நான் முதல்-அமைச்சர் ஆக ஆதரவு தெரிவித்தனர். அதன்படி தான் நான் முதல்-அமைச்சர் ஆனேன். முதல்-அமைச்சர் யார்? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. அது அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குத்தான் உண்டு.

ஜனாதிபதியிடம் புகார்

லட்சுமிநாராயணன் தேர்தலுக்கு தேர்தல் உதவி செய்தவர்களை ஏமாற்றிவிட்டு கட்சி மாறியபடி உள்ளார். பொதுப்பணித்துறையில் 30 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுகிறது. புதிதாக போடப்படும் சாலைகள் 15 நாளில் பெயர்ந்து விடுகிறது.

புதுவை அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து உரிய ஆதாரத்துடன் விரைவில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஜனாதிபதியிடம் புகார் செய்வோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Next Story