ஆட்டோ திருடிய தொழிலாளி கைது


ஆட்டோ திருடிய தொழிலாளி கைது
x

அரியாங்குப்பம் நல்லவாடு மீனவ கிராமத்தில் ஆட்டோ திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அாியாங்குப்பம் அருகே நல்லவாடு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 53). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். வீட்டு முன் நிறுத்தி இருந்த இவரது ஆட்டோவை மர்மநபர் யாரோ திருடி சென்து விட்டார். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் தவளக்குப்பம் அடுத்த கொருக்கமேடு சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஆட்டோவில் வந்த, மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த சுருக்கு வலை தயார் செய்யும் தொழிலாளி சலாவுதீன் (38), என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஆட்டோவை நல்லவாடு பகுதியில் திருடியை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story