தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கோரிமேடு அருகே கடும் வயிற்று வலியால் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,

புதுச்சேரி

புதுச்சேரி கோரிமேடு ஆனந்தாநகர் புகழேந்தி வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). நைனார் மண்டபத்தில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுதா. புதுவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். சீனிவாசன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்த நிலையில் நேற்று சுதா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story