டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
வானூர்
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாவாடைராயன் (வயது 28). இவரது நண்பர் வேல்முருகன் (25). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் நான்குவழிச்சாலை தென்கோடி பாக்கம் மெயின் ரோட்டில் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பாவாடைராயன், வேல்முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்துபோனார். வேல்முருகன் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார். இது குறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






