மின்கம்பிகளை மாற்றி அமைத்த ஊழியர்கள்


மின்கம்பிகளை மாற்றி அமைத்த ஊழியர்கள்
x
தினத்தந்தி 30 Jun 2023 10:05 PM IST (Updated: 30 Jun 2023 10:13 PM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் மின்கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக மின்கம்பிகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது. கனமழை பெய்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் பல ஆண்டுகள் ஆவதால் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் இன்று மின்துறை இளநிலை பொறியாளர் லூர்து தலைமையிலான மின்துறை ஊழியர்கள் மின்கம்பிகளை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

1 More update

Next Story